சமீப காலமாக டீப் ஃபேக் என்று சொல்லப்படக்கூடிய மென்பொருட்கள் இலவசமாகவே பல்வேறு தளங்களில் கிடைக்கின்றன.
இந்த டீப் ஃபேக் மென்பொருளை வைத்து ஒருவருடைய முகத்தை இன்னொருவருடைய வீடியோவில் எளிமையாக பொருத்தி விட முடியும். டீப் ஃபேக்வீடியோக்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்த, அந்த மென்பொருளில் புலமைவாய்ந்த சிலரால் மட்டுமே இந்த வீடியோ டீப் ஃபேக் மென்பொருளில் செய்யப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், வெகுஜன மக்கள் இணையவாசிகள் இந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது கண்டிப்பாக அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. இது உண்மையான வீடியோ தான் என்று நம்பி விடுவார்கள்.
சமீபத்தில் நடிகைகள் அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட சில நடிகைகளின் வீடியோக்கள் டீப் ஃபேக் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டன. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மோசமான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.ர் நடிகர் அமிதாப் பச்சன் இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அந்த அளவுக்கு இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது. இணையத்தில் பரவி வரக்கூடிய என்னுடைய டீப் பேக் வீடியோவை பார்த்து நான் மிகவும் காயப்பட்டு இருக்கிறேன்.
இது போன்ற விஷயங்களை சில நேரங்களில் நான் மிகுந்த பயத்திற்கு ஆளாகிறேன். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் பல்வேறு மோசமான நோக்கங்களுக்கு பயன்படுத்துகின்றன.
ஆனால், இன்று ஒரு பெண்ணாக ஒரு நடிகையாக நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய பாதுகாப்புக்காகவும் என்னுடைய எதிர்காலத்திற்க்காகவும் எனக்கு துணை நிற்கின்றனர். நான் பள்ளி, கல்லூரியில் இருக்கும் பொழுது இது மாதிரியான விஷயங்களில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
இப்படியான விஷயங்களை எப்படி எதிர்கொள்வது என எனக்கு தெரியவில்லை இது போன்ற விஷயங்களை உடனடியாக கண்டறிந்து களை எடுக்க வேண்டும் இதனால் வேறு யாரும் பாதிக்கப்படுவதற்குள் அவசரமாக இந்த பிரச்சினையை கையில் எடுத்து சரி செய்ய வேண்டி இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.