இந்த விவகாரத்தில் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு பிரபலங்கள் கூட கமல்ஹாசனுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் கமலஹாசன் பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதற்கு முக்கியமான காரணம் அவர் பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டார் என்பது அல்ல, சக போட்டியாருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கமல்ஹாசன் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்று பிரதீப் ஓரிடத்தில் பதிவு செய்திருப்பார்.
அதனை அடிப்படையாகக் கொண்டுதான் நடிகர் கமலஹாசன் பிரதீப்பை வெளியேற்றி இருக்கிறார் என கருத்துக்கள் பரவி வருகின்றது.
இது ஒரு பக்கம் இருக்க சக பிக் பாஸ் போட்டியாளர் நிக்ஸன் என்பவர் பெண் போட்டியாளர் ஐசுவின் வேட்டியை சரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அடேய் என்னடா பண்ற..? என்று பதறி வருகின்றனர். மேலும் இதெல்லாம் பெண்களின் பாதுகாப்புக்கு குறை என்று லிஸ்டில் வராதா..? என்ற கேள்வியும் கமல்ஹாசனை டேக் செய்து எழுப்பி வருகின்றனர்.
ஆனால், ஆண்டவரோ அடுத்த அடுத்த தன்னுடைய பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் என்று தெரிகிறது.