பிரபல இளம் நடிகை சுனேனா சமீபத்திய பேட்டி ஒன்றிய கலந்து கொண்டார் நடிகர் விஜயுடன் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தீர்கள்.
சில நிமிட காட்சிகள் என்றாலும் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட காட்சியின் நடித்திருந்தீர்கள். அதேபோல படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் விஜயுடன்கலந்து கொண்ட நாட்களும் குறைவாகவே இருந்திருக்கும் என நம்புகிறோம்.
ஆனால், இந்த குறுகிய காலத்தில் நடிகர் விஜய்யிடம் இதனை கற்றுக் கொண்டேன் இந்த விஷயம் நடிகர் விஜய்யிடம் பிடித்திருந்தது என்றால் எந்த விஷயத்தை கூறுவீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை சுனைனா விஜயிடம் இருக்கக்கூடிய தனிப்பட்ட குணம் என்றால் அவரிடம் இருக்கக்கூடிய மேனரிசம் தான்.
திரைப்படங்களில் நீங்கள் பார்க்கக்கூடிய சில முகபாவனைகள் மற்றும் மேனரிசம் நடிகர் விஜயிடம் இயற்கையாகவே இருக்கிறது.
அதை நான் படப்பிடிப்பு தளத்தில் கவனித்திருக்கிறேன். வெகு சில நடிகர்களுக்கு மட்டுமே அவர்கள் நிஜ வாழ்க்கையில் இருக்கக்கூடிய மேனரிசம் சினிமாவிலும் திரையிலும் வொர்க் அவுட் ஆகும்.
அதுபோல, நடிகர் விஜய்க்கு அவருடைய தனிப்பட்ட மேனரிசம் திரைப்படங்களிலும் ஒர்க் அவுட் ஆகிறது. நிறைய நடிகர்கள் முகபாவனைகளை கஷ்டப்பட்டு வரவழைப்பார்கள்.
ஆனால், ஒரு காட்சியை விவரித்தால் அதற்குண்டான முகபாவணையை அடுத்த நொடியே கொண்டு வந்து விடுவார் நடிகர் விஜய். படப்பிடித்த காலத்தில் நான் அதை பார்த்து வியந்தேன் என பதிவு செய்திருக்கிறார் நடிகர் நடிகை சுனைனா.