Sunday, December 3, 2023
Homeஇந்தியாகலியாணம் செய்வதாக கூறி 10ம் வகுப்பு மாணவியை அம்மா ஆக்கிய 22வயது தமிழ் குடும்பஸ்தர்..!

கலியாணம் செய்வதாக கூறி 10ம் வகுப்பு மாணவியை அம்மா ஆக்கிய 22வயது தமிழ் குடும்பஸ்தர்..!

- Advertisement -

 

22 வயது நிரம்பிய அந்த நபர் கோயம்பத்தூர் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவராவார்.

 

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் அந்த நபர், தனது உறவினர் சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல சமயங்களில் அவரை கற்பழித்துள்ளார்.

 

இறுதியில் அவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்ததும், சில மாத்திரைகளை கொடுத்து அவருக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

போலீசார் விசாரணையில் வெளியான தகவலின் படி அந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அடிக்கடி அந்த நபருடன் அலைபேசியில் பேசி வந்ததாகவும், ஆனால் அவருடைய தாய் அவரை கண்டித்து ஒழுங்காக படிக்க சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்த சூழ்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அந்த மாணவி, தனது வீட்டை விட்டு வெளியேறி அவரது தோழி வீட்டுக்கு சென்று விட்டு விரைவில் திரும்பி விடுவதாக கூறிச் சென்றுள்ளார். ஆ

 

னால் இரவு வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாத காரணத்தினால், பதறிப்போன அவருடைய தாய் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சூழலில் தான் கடந்த வெள்ளிக்கிழமை காலை போலீசார் அந்த சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

 

அப்பொழுது அவர் அந்த இளைஞருடன் இருந்ததாகவும், உடனடியாக அவரை மீட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளார். விசாரணையில் சிறுமியுடன் இருந்த அந்த இளைஞருக்கும், அந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

 

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அந்த மாணவியை, அந்த இளைஞன் கற்பழித்ததும் தெரிய வந்துள்ளது. அந்த இளைஞனுக்கு ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் அந்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments