ஏர் இந்தியா விமானத்தை வரும் 19-ம் தேதி தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குருபத்வந்த் சிங் பன்னுன் கூறியுள்ளார்.
அவர் கனடாவில் நுழைய தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டின் குடியு ரிமைத்துறைஅமைச்சருக்கு, கனடாவில் உள்ள இந்து வழக்கறிஞர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தடைசெய்யப்பட்ட எஸ்எப்ஜே(நீதிக்கான சீக்கியர் அமைப்பு) நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன் என்பவர்புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்ப தாவது: நவம்பர் 19-ம் தேதி அன்று ஏர் இந்தியா விமானத்தை தகர்ப்போம். எனவே சீக்கியர்கள் அதில் பறக்க வேண்டாம். நவம்பர் 19-ம்தேதி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மூடியிருக்கும். அதன் பெயர் மாற்றப்படும். இவ்வாறு குருபத்வந்த் சிங் பன்னுன் கூறியுள்ளார்.
அச்சுறுத்தல் விடுப்பது குருபத்வந்த் சிங்குக்கு இது முதல் முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம், இந்தியா – கனடா உறவில் விரிசல் ஏற்பட்டபோது, கனடாவில் உள்ள இந்துக்கள் கனடாவை விட்டுவெளியேற வேண்டும் என குருபத்வந்த் சிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.