Amala Paul married her boyfriend Jagat Desai
இவருக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் என்பவர் உடன் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார்.
அதனை தொடர்ந்து ஆன்மீகம், அடிக்கடி சுற்றுலா செல்வது நண்பர்களுடன் குதூகலமாக இருப்பது, வெப் சீரிஸ்களில் நடிப்பது என சுதந்திரப் பறவையாக சுற்றிவந்த நடிகை அமலா பால் தற்பொழுது தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இவருடைய திருமண வைபவத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலாபாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது.
மேலும் எந்த பிரபலத்திற்கும் அல்லது நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை நடிகை அமலா பால் என்று தெரிகிறது.
இந்நிலையில் இவருடைய சமீபத்திய திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.