Monday, December 4, 2023
Homeசினிமாபிக்பாஷ் மாயா என்னை பாலியல் நாசம் செய்தார்-நடிகை பகீர் புகார்..! {படங்கள்}

பிக்பாஷ் மாயா என்னை பாலியல் நாசம் செய்தார்-நடிகை பகீர் புகார்..! {படங்கள்}

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க கூடிய நடிகை மாயா கிருஷ்ணன் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் தன்னை படுக்கையில் நாசம் செய்திருக்கிறார் என்றும் இளம் நடிகை ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருக்கிறார்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு வானவில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மாயா கிருஷ்ணன்.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் தொடரி நடிகர் ஜோதிகாவின் மகளிர் மட்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் விக்ரமின் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக சில காட்சிகளில் நடித்திருந்தார். இவர் மாடல் அழகியும் நடிகையுமான அனன்யா ராம் பிரசாத் என்பவரை பாலியல் ரீதியாக சீண்டிருக்கிறார்.

இதனை நடிகை அனன்யா ராம்பிரசாத்-தே கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நடிகை மாயா கிருஷ்ணன் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவரை 2016 இல் சந்தித்தேன்.

அப்போது எனக்கு 18 வயது தான். மாயா எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக நிறைய ஆலோசனை கூறினார். எனவே அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம். ஒரு கட்டத்தில் நடிகை மாயா தன்னுடன் மட்டும்தான் நான் பழக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அதக்கேற்ப செயல்பட ஆரம்பித்தார். என்னை சார்ந்த எல்லா முடிவுகளையும் அவரே எடுக்க தொடங்கினார். என் மீது அவருடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்.

மெதுவாக என்னுடைய நண்பர்களை என்னிடம் இருந்து துண்டித்தார். என் நண்பர்கள் என்னை வெறுக்கும் அளவுக்கு சில விஷயங்களை செய்தார். என்னுடைய பெற்றோரையும் என்னிடமிருந்து பிரித்து விட்டார்.

இப்படியே செல்ல ஒரு கட்டத்தில் நான் என் மீது இருந்த தன்னம்பிக்கையும் சுயமரியாதையையும் இழக்க தொடங்கி விட்டேன். நான் அவருடைய அடிமை போல உணர ஆரம்பித்தேன்.

எனவே, நான் நானாக இருக்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கை முழுவதையும் மாயா கிருஷ்ணன் ஆக்கிரமித்துக் கொண்டார். உச்சகட்டமாக, என்னை பாலியல் ரீதியாக சீண்ட ஆரம்பித்தார்.

அடிக்கடி தவறான முறையில் கட்டிப்பிடித்தார், முத்தம் கொடுத்தார், படுக்கையில் பாலியல் ரீதியாக என்னை பயன்படுத்திக் கொண்டார். ஒரே அறையில் ஒரே மெத்தையில் இருவரும் தூங்கினோம்.

அப்படி அருகருகில் படித்திருக்கும் பொழுது என்னை பாலியல் ரீதியாக சீண்டி இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தான் நான் தவறான இடத்தில் சிக்கி இருப்பதை உணர்ந்தேன். பிறகு அதிலிருந்து மீண்டு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று என்று அனன்யா கூறியிருக்கிறார்.

தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவரைப் பற்றிய இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் மாயா ஒரு ஓரினச்சேர்க்கையாளரா..? என்ற கேள்வியும் எழும்பி வருகிறது. மேலும் இவருடைய நடவடிக்கைகளையும் ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments