இது அறிமுக நடிகைகள், முன்னாள் நடிகைகள், பலம்பெரும் நடிகைகள் என எந்த வித்தியாசமும் கிடையாது. அனைவரும் தங்களுடன் பணியாற்றிய முன்னணி நடிகர்கள் குறித்து தங்களுடைய பார்வையே பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருந்த நடிகை சரிதா சிவகார்த்திகேயனை படப்பிடிப்பு தளங்களில் பார்க்கும் பொழுது அவர் வேலை செய்யும் விதத்தை பார்க்கும் பொழுது இளம் வயதில் ரஜினிகாந்த் பார்ப்பது போல இருக்கிறது ரஜினிகாந்த் போல இவரும் வருவார் என்றெல்லாம் பேசி இருந்தார்.
இது குறித்து கடுப்பான பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோ ஒன்றில் கூறியதாவது, சரிதாவிற்கு நான்கு கணவர்கள் என்பது யாருக்காவது தெரியுமா..?
சரிதா சினிமாவில் நுழைவதற்கு முன்பே ஆந்திராவில் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே அவரை விட்டுவிட்டு இங்கு வந்தவர்.
இரண்டாவது மலையூர் மம்பட்டியான் நடிக்கும் பொழுது தியாகராஜன் உடன் காதல் வயப்பட்டார்.
அதன் பிறகு மலையாள நடிகர் முகேஷ் என்பவருடன் காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தையாகி அவரையும் பிரிந்தார் சரிதா.
அவர் ஒரு சிறந்த நடிகை அதில் எந்த குழப்பமும் எனக்கு கிடையாது. ஆனால், சிவகர்த்திகேயனுக்கு ஐஸ் வைப்பதற்காக அவரை பார்த்து ரஜினி போல இருக்கிறார், அவருடைய மேனரிசம் ரஜினி போல இருக்கிறது, என்று சொல்வதெல்லாம் உடனடியாக கண்டிக்கத்தக்க விஷயம் என தெரிவித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.