கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி என்ற திரைப்படத்தில் பூர்ணிமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.
இவருக்கு இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நலனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, புலி, உப்பு கருவாடு, அஞ்சல, உள்குத்து என தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.
இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தற்போது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.
மட்டுமில்லாமல் நடிகை மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலையான விமர்சனம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மியா கலிஃபா என்று நினைத்து விட்டோம் என்று கலாய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.