நடிகை பூங்கொடி-யை பலருக்கும் தெரிந்திருக்கும். இவர் மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தமிழில் வீரமும் ஈரமும் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்தில் நடிகரும் இயக்குனமான தருண் கோபிக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் இந்த படம் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
சமகாலத்தில் ரசிகர்களை கவர்ந்த குடும்பப்பங்கான ஒரு திரைப்படம் என்றால் அது மாயாண்டி குடும்பத்தார் என்று கூறலாம்.
அதன் பிறகு மிளகாய் என்ற திரைப்படத்திலும் கோரிப்பாளையம் என்ற திரைப்படத்திலும் நடித்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பலரும் இவரை அடுத்த புன்னகை அரசி அடுத்த சினேகா என்று வர்ணிக்க தொடங்கினார்கள்.
ஆனால் நடந்தது வேறு. மூன்றே மூன்று திரைப்படங்களில் நடித்த நடிகை பூங்கொடி அதன் பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போனார்.
இடையில் என்ன நடந்தது என்றால் மிளகாய் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தின் துணை கேமராமேன் வினோத் என்பவர் உடன் காதல் வயப்பட்டார் நடிகை பூங்கொடி.
இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர். ஆனால் நடிகை பூங்கொடியின் வீட்டில் இவருக்கு இவருடைய இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் வினோத்-தை தான் திருமணம் செய்து கொள்வேன் என விடாப்படியாக இருந்திருக்கிறார் நடிகை பூங்கொடி.
மறுபக்கம் பூங்கொடியின் குடும்பத்தினர் அவருக்கு வேறு மாப்பிள்ளை தேடும் பணியில் ஈடுபடவே வீட்டை விட்டு வெளியேறிய பூங்கொடி வினோத்-ஐ திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்த கையோடு தன்னுடைய சினிமா வாழ்க்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
தற்போது இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் கூட இணையத்தில் கிடைப்பது இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு மீடியா வெளிச்சமே இல்லாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார் நடிகை பூங்கொடி.