Thursday, November 30, 2023
Homeஇந்தியாமனைவியுடன் கள்ள உறவு-திட்டம் போட்டு வரவழைத்து கள்க்காதலனின் மர்மஉறுப்பை அறுத்த கணவன்..!

மனைவியுடன் கள்ள உறவு-திட்டம் போட்டு வரவழைத்து கள்க்காதலனின் மர்மஉறுப்பை அறுத்த கணவன்..!

- Advertisement -

 

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் குற்றத்தடுப்பு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வருபவர் இப்தார் அகமத். அதே காவல் நிலையத்தில் சகுந்தலா என்பவர் காவலராக வேலை செய்து வருகிறார். சகுந்தலாவின் கணவர் ஜெகதீஷ் வேறொரு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்கிறார்.

 

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை இரவு காவல் ஆய்வாளர்  இப்தார் அகமத் அவருடைய காரில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கவனித்த உள்ளூர் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் காவல் ஆய்வாளர் இப்தார் அகமதை மீட்டு சிகிச்சைக்காக மகபூப் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

 

இந்த நிலையில் காவல் ஆய்வாளரின் உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் அவரை சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் காவலர் ஜெகதீஷ் அவருடைய மனைவியான காவலர் சகுந்தலா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து காவல் ஆய்வாளர் இப்தார் அகமதை தாக்கியதாகவும் அப்போது ஜெகதீஷ் காவல் ஆய்வாளரின் ஆணுறுப்பை கத்தியால் அறுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

 

மேலும் சகுந்தலா, இப்தார் அஹமத் ஆகியோருக்கு இடையே ரகசிய தொடர்பு இருந்ததும் இதனை கண்டித்த ஜெகதீஷ் சகுந்தலா மூலம் இப்தார் அஹமத்தை வரவழைத்து கடுமையாக தாக்கி அவருடைய ஆணுறுப்பை அறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜெகதீஷ், சகுந்தலா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments