Monday, December 11, 2023
Homeசினிமாநான் சென்னையில் பிறந்தவன் எனக்கு சாதி தெரியாது..!

நான் சென்னையில் பிறந்தவன் எனக்கு சாதி தெரியாது..!

- Advertisement -

பிரபல நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் எனக்கு சாதி என்றால் என்ன என்று கூட தெரியாது யாரிடமாவது பழகினால் அதிகபட்சமாக அவருடைய பெயரை கேட்பேன் அவ்வளவுதான் என பேசி இருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் நிஜத்திற்கும் இவர் பேசியதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று இணையவாசிகள் பலரும் பேசி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் கார்த்தியின் தந்தை சிவக்குமார் ஒரு மேடையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசும் பொழுது ஒருமுறை நானும் என் குடும்பத்தினரும் ஜெயலலிதாவை பார்க்க சென்றிருந்தோம்.

அப்பொழுது ஜெயலலிதா கார்த்தியை பார்த்து உன் அண்ணன் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நீயாவது, உன்னுடைய அம்மா அப்பா சந்தோஷப்படுவது போல அவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள் என்று கூறினார்.

எனவும் அதன் பிறகு தான் எங்களுடைய சாதியிலேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தோம் என்றும் சிவகுமார் பேசியிருந்தார்.

மட்டுமில்லாமல் கோடம்பாக்கத்தில் வாய் வழியாக பரவக்கூடிய ஒரு தகவலும் இருக்கிறது. இது உறுதிபடுத்தப்படாத தகவல். அது என்னவென்றால், நடிகர் சூர்யா அதாவது தன்னுடைய அண்ணன் சூர்யாவின் காதலுக்கு சம்மதம் வாங்க, நடிகர் கார்த்தி செய்த வேலை தான் அது.

தன்னுடைய அண்ணன் காதலுக்கு சம்மதம் வாங்க, அண்ணன் அவரு விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளட்டும். நான் நம்முடைய சாதியிலேயே திருமணம் செய்து கொள்கிறேன் என்று நடிகர் கார்த்தி வாக்குறுதி கொடுத்ததின் பேரில் தான் சூர்யாவின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் சிவகுமார் குடும்பத்தினர்.

நடிகை ஜோதிகா வேறு மதம் என்பதால் அவரை மருமகளாக ஏற்றுக் கொள்வதில் ஆரம்பத்தில் தயங்கி இருக்கின்றனர் நடிகர் சிவகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர். இதனை தொடர்ந்து உள்ளே புகுந்த கார்த்திக் நான் உங்களுடைய விருப்பத்தின்படி திருமணம் செய்து கொள்கிறேன் என்று பேசி சூர்யாவின் திருமணத்திற்கு ஒப்புதல் வாங்கினார் என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் இது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போதாது என்று நடிகர் கார்த்தியின் திருமண அழைப்பிதழ் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவருடைய மாமனார் பெயருக்கு பின்னால் சாதி பெயரை அடைமொழியாக சேர்த்துள்ளனர். இது போதாதா..? விவகாரமான கருத்துக்களை கொண்டு நடிகர் கார்த்தியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் இணைய வாசிகள்.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி. சாதி இருக்கிறது என்று ஒரு கும்பல் சொல்கிறது.. சாதி இல்லை என்று ஒரு கும்பல் சொல்கிறது.. ஆனால் சாதி என்ற பெயர் எடுத்தாலே அங்கு ஒரு சர்ச்சை வெடிக்கிறது என்பதும்.. அந்த சர்ச்சையின் மூலம் அரசியல் லாபம் பார்க்க ஒரு கும்பலும்.. படம் எடுத்து பணம் பார்க்க ஒரு கும்பலும்.. இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments