நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மனோஜ் குமார் (21), மாரியப்பன் (19) ஆகியோர் கடந்த 30-ம் தேதி குளிக்க சென்றுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கஞ்சா பாேதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று குடிபோதையில் வழிமறித்து என்ன சாதி என கேட்டு பட்டியலின சமூகத்தினர் என தெரிந்ததும் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது சிறுநீரை கழித்துள்ளனர். தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்துள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள் நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தியதை அடுத்து தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி (25), ஆயிரம்(19), நல்லமுத்து (21), ராமர் (22), சிவா (22), லட்சுமணன் (20) உள்ளிட்ட 6 பேரை கைது செய்யப்பட்டனர்.