பிரபல இளம் நடிகை மஹிமா நம்பியார் தமிழில் சாட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் மஹிமா நம்பியார் தற்பொழுது தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் மஹிமா நம்பியார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அதாவது திருமணம் செய்து கொள்வீர்களா..? அல்லது லிவிங் ரிலேஷன்ஷிப் என்ற முறையில் வாழ்வீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மஹிமா, கண்டிப்பாக திருமணம் செய்து கொண்டு தான் வாழ்வேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், லிவிங் ரிலேஷன்ஷிப் என்பது அவர் அவரவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், நம்முடைய கலாச்சாரம் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒருவருடன் சேர்ந்து வாழ்வதுதான் சரியாக இருக்கும் அதுதான் சட்டபூர்வமானதும் கூட என கூறியுள்ளார் அம்மணி.