- Advertisement -
பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயை திட்டியதால் கொலை செய்ததாக அவர்கள் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த இடத்துக்கு 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களோடு வந்து பிரசாந்த்தை மட்டும் அழைத்து சென்று அடித்து, கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாந்த்தை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- Advertisement -