கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர்கள் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சேட்டை என்ற திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.
இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது இந்த திரைப்படத்தில் நடிகர் பிரேம்ஜி-யின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது வஞ்சகன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சில குறும்படங்களிலும் கூட நடித்து இருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்சிகளில் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும் பல்வேறு தளங்களில் தன்னை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
சில சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்று இருக்கிறார். இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடல் எடை கூடி குண்டாகியுள்ள இவரை பார்த்த ரசிகர்கள் நக்ஷத்ரா நாகேஷா இது..? என்ன இத்த தண்டி ஆகிட்டாங்க..? என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.