நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து தான் எதிர் கொண்ட தர்ம சங்கடமான சூழ்நிலை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றிய பதிவு செய்திருக்கிறார்.
அவரிடம் சினிமா நடிகைகளுக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பிரச்சினை இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள் உங்களுக்கு அப்படி ஏதேனும் பிரச்சனை வந்திருக்கிறதா..? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நிமேஷிகா ராதாகிருஷ்ணன் சீரியல்களில் அப்படி பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
நான் எனக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக கூறிய நபரிடம் கேட்டேன். சார் காஸ்டிங் கவுச் என்றால் என்ன..? எனக்கு புரியவில்லை..? என்று கூறினேன். அதற்கு அவர் நிஜமாகவே உங்களுக்கு தெரியாதா..? உன்னுடைய தோழிகளிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று கூறினார்.
அப்படி என்றால் என்று வினாவினேன்.. அவர்கள் கூறியதைக் கேட்டு நான் மிரண்டு போய்விட்டேன். பட வாய்ப்புக்காக அவர்கள் உன்னையே கேட்கிறார்கள் என்று கூறினார்கள். எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது.
எவ்வளவு தைரியம் இருந்தால்.. நீங்கள்.. இப்படி என்னிடம் கேட்பீர்கள்.. எங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்படியான விஷயங்களை கேட்காதீர்கள்..? என்று கடுமையாக திட்டிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.