பஞ்சாபில் போதைப் பொருள் விற்பனையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. பெண்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாபில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் உள்ளது. இதற்கு, அம்மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது முக்கிய காரணமாக உள்ளது.
போதைப் பொருளை பஞ்சாப் வாசிகள் இடையே விற்பனை செய்வதில் பெண்களின் பங்குஅதிகரித்து வருகிறது. இம்மாநிலத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் போதைப் பொருள் விற்றதாக பெண்கள் மீது பதிவாகும் வழக்குகள் அதிகரித்து வருகிறது.பெண்கள் போதைப் பொருள்விற்பதை பலர் தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். வைரலாகி வரும் இப்பதிவுகளால் பஞ்சாபின் காவல்துறையும் தர்மசங்கடத்திற்கு ஆளாகி வருகிறது.
இதன் காரணமாக இவர்கள்சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இளம்பெண்ணைபோல் பல பெண்கள் தங்கள்குடும்பத் தலைவர் செய்யும் தவறால் இந்தத் தொழிலுக்கு ஒரு விபத்தாக வர நேரிட்டுள்ளது.