பிரபல பாடகி சின்மயி சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் இடையே எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஒரு பதிவை தன்னுடைய Twitter பக்கத்தில் எழுதி இருக்கிறார்.
இந்த விவகாரம் வெளியான நாள் முதல் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக பேசிக் கொண்டிருப்பவர் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி.
இமான்-சிவகார்த்திகேயன் விஷயத்தில் பலரும் அறிந்திடாத விஷயங்களை ரகசியமான சில தகவல்களை வெட்ட வெளியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார் பிஸ்மி.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் பத்திரிக்கையாளர் பிஸ்மியை வசை பாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை பாடகி சின்மயி ஸ்ரீபாதா பத்திரிக்கையாளர் பிஸ்மியை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறிய விஷயங்கள் என்ன..? என்றும் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார்.
அவர் எழுதிய பதிவானது, பெண்களைப் பற்றி, குறிப்பாக பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பேசும்போது சற்று பொறுப்பாக இருக்குமாறு வலைப்பேச்சு பிஸ்மியிடம் தொலைபேசியில் பேசினேன்.
என்னுடைய நண்பரிடம் இருந்து அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கி அவருக்கு போன் செய்தேன். தேவைப்பட்டால் நான் பேசுவதை நீங்கள் ரெக்கார்ட் செய்து கொள்ளலாம் என்றும் கூறினேன்.
நான் பேச ஆரம்பித்ததிலிருந்து என்னிடம் ஒரு முரட்டுத்தனமான போக்கையே கையாண்டார் பிஸ்மி.
குறிப்பாக பப்புக்கு போற பொம்பளை.. அவளுக்கு என்ன ஆனா என்ன..? அவ மேல எனக்கு பரிதாபம் வரல…! என்று கூறினார்.
அவர் மிகப்பெரிய பாலோவர்களை வைத்திருக்கிறார். அவர் பேசக்கூடிய விஷயத்தை நிறைய பேர் கேட்கிறார்கள். அவரிடம் ஒரு விஷயத்தை நிறுத்தி நிதானமாக கேட்கக்கூடிய பொறுமை இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், அவருடைய சுயரூபத்தை நான் பார்த்து விட்டேன். இருந்தாலும் அவரிடம் நான் கூறப்படக்கூடிய விஷயத்தை எடுத்து வைக்க முயற்சி செய்தேன்.
அவர் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். அவரிடம் ஒரு விதி இருக்கிறது. குற்றம் சாட்டிய வரை குறை சொல்லுவார் மறுபக்கம் குற்றம் சாட்டப்பட்டவரையும் குறை சொல்வார்.
என் விஷயத்தில் வைரமுத்துவை விட்டுவிட்டு என்னை குறை சொல்லிக் கொண்டிருந்தார். தற்பொழுது சிவகார்த்திகேயன் விஷயத்தில் இமானை விட்டுவிட்டு சிவகார்த்திகேயனை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு ஒரு விஷயத்தில் ஆதாயம் கிடைக்கிறது என்றால் அதற்காக யாரையும் பழித்து பேச தயாராக இருக்கக்கூடிய ஒரு நபர்தான் இந்த பிஸ்மி.
சகோதரனைப் போல தோற்றம் அளிக்கும் ஒருவர் நிஜத்தில் கொடூரமான மனிதராக நடந்து கொள்கிறார். அவர் பேசிய பேச்சுக்கும் அவருடைய தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.
பிஸ்மி ஆணாதிக்க ஒழுக்கங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறார். பொம்பளைன்னா இப்படி இருக்கணும் பப்புக்கு போற பொம்பளைக்கு என்ன ஆனா என்ன என்றெல்லாம் பேசுகிறார். அவருடைய நிலைப்பாடு என்ன என்பது இதன் மூலம் எனக்கு தெரிந்து விட்டது என பதிவு செய்துள்ளார் சின்மயி.