பூவே உனக்காக தொடரில் நடித்து பிரபலமான ராதிகா ப்ரீத்தியை உங்களுக்கு நினைவில் இருக்கலாம் இவருக்கு தற்போது வெள்ளி திரையில் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொண்டால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
இந்த ராதிகா ப்ரீத்தி சன் தொலைக்காட்சியில் 2020 முதல் 2002 வரை வெளிவந்த பூவே உனக்காக தொடரில் முதன்மை கதாபாத்திரத்தை ஏத்து நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.
இந்த தொடர் நிறைவடைந்த பிறகு மாடலின் துறையிலும் பணியாற்றி இருக்கக்கூடிய இவர் பெங்களூருவை போர்வீகமாக கொண்டவர் சிறு வயது முதலிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்டு இருக்கிறார். மேலும் இவர் கன்னட மொழியில் பன்டா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதனை அடுத்து தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தற்போது இவர் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் சந்தானத்துக்கு இணையாக நடிக்க உள்ளார்.
மேலும் பில்டப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குனர் கல்யாண் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது இதனை அடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.