கோலிவுட்டில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா.
இதனை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாகவும் இரண்டாவது கதாநாயகி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
குறிப்பாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்பொழுது தெலுங்கு சீரியலில் தன்யா பாலகிருஷ்ணன் நடித்து வருகின்றார் மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
வெப் சீரிஸ்களிலும் இவரை பார்க்க முடிகிறது. சமீப காலமாக நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களை விளம்பர மையங்களாக மாற்றி வருகின்றனர் என்பதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் அழகு சாதன பொருட்கள், செல்போன்கள், ஆன்லைன் கேம்கள். புடவைகள் என பல்வேறு பொருட்களுக்கு பிரமோஷன் செய்து கல்லாகட்டி வருகின்றனர்.
சிலர் நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்து வருகிறார். அந்த வகையில் A to Z என்ற ஒரு மாத்திரை விளம்பரத்தில் நடித்திருக்கிறார் இந்த டேப்லெட்டை ஒரு நாளைக்கு ஒன்று என பயன்படுத்தினால் போதும் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பதிவு செய்திருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எசகு பிசகான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை பார்த்த தன்யா பாலகிருஷ்ணன் தன்னுடைய கமெண்ட்ஸ் செக்ஷனுக்கு பூட்டு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்