- Advertisement -
மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னைமகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி பவித்ரா. இவர் தனது 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மகள், மகனை கொலை செய்ய பிளேடால் அறுத்துவிட்டு, தனது கழுத்தையும் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மகள் மட்டும் உயிரிழந்தார். பவித்ரா தனது மகனுடன் உயிர் பிழைத்தார். அதையடுத்து மெரினா போலீஸார்பவித்ராவை கொலை வழக்கில் கைது செய்தனர்.
- Advertisement -