ஓஹோ என வந்திருக்க வேண்டிய படம். கதை, திரைக்கதை என பக்காவாக இருந்த அந்த கேங்ஸ்டர் இயக்குனர் படத்தை அழகாக செதுக்கி கொண்டிருந்தார்.
எதற்கும் துணைக்கு இருக்கட்டுமே… என தன்னுடைய நண்பரான விலை உயர்ந்த கல் இயக்குனரை அருகில் வைத்துக் கொண்டார்.
அவன் தான்டா பெரிய வேலையா பார்த்து விட்டுட்டு போயிட்டான்.. என்பது போல அதனால் வந்தது தான் வினை. ஆலோசனை கொடுக்கிறேன் என்ற பெயரில் படத்தின் கதையில் திரைக்கதையில் பல மாற்றங்களை செய்து படத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது கழுவி ஊற்றும் அளவுக்கு செய்து விட்டார் அந்த இயக்குனர்.
இந்நிலையில், உச்ச நட்சத்திரம் கடுப்பாகி வெளியே போங்க ப்ளீஸ்… என்று சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது..? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான லீடர் நடிகரின் படத்தில் துணை இயக்குனராக இன்னும் சொல்லப்போனால் படத்தின் இரண்டாம் பாதியை இயக்கியது இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு படத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் இந்த விலை உயர்ந்த கல்லான இயக்குனர்.
இறுதியில் படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பல்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால், கேங்ஸ்டர் இயக்குனர் திரைக்கதையை அருமையாக பைன்ட் செய்து முடித்துள்ளார்.
கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களே ஒரு நிமிடம் ஷாக் ஆகும் அளவிற்கு திரை கதையை நகர்த்திக் கொண்டிருந்திருக்கிறார் கேங்ஸ்டர் இயக்குனர்.
ஆனால் படத்தில் ரசிகர்களுக்கான செலிபிரேஷன் மொமண்ட் இருக்க வேண்டும் அதனால் சில மாஸ் காட்சிகளை உள்ளே சொருகுகிறேன் என்ற பெயரில் படத்தின் திரைக்கதையை நாரடித்து கிளைமாக்ஸ் ட்விஸ்டை முதல் பாதியிலேயே அவிழ்த்து விட்டார்.
விவரம் புரியாத லீடர் நடிகரும்.. ஆமா,. ஃபேன் பாய்ஸ் செலிபிரேஷன் மொமென்ட் இருந்தா நல்லா இருக்கும் என்ற மூட நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே, கிளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்டை உடைக்கும் பொழுது ஒட்டுமொத்த திரையரங்கம் உச் கொட்டி.. வெடிச்சிரிப்பை வெளிப்படுத்தியது தான் மிச்சம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். மறுபக்கம் இணைய பக்கங்களில் உச்சநடிகரை சீண்டும் விதமாகவும், லீடர் நடிகரை தாஜா செய்யும் விதமாகவும் சில பதிவுகளை எழுதி ரசிகர்களிடையே சண்டை மூட்டி கொண்டிருந்தார் அந்த விலை உயர்ந்த கல்லான இயக்குனர்.
இதன் மூலம் லீடர் நடிகரின் கால் சீட்டை பெற்றுவிடலாம். நேரடியாக அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி விடலாம் என்ற ஆசைப்பட்டிருபார் போல தெரிகிறது. ஆனால் அவருடைய எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக நடந்து இருக்கிறது சமீபத்தில் நடந்த சம்பவம்.
கேங்ஸ்டர் இயக்குனர் உச்ச நடிகர் படத்தை இயக்க இருக்கிறார். படம் குறித்த ஆலோசனையின் போது உச்ச நடிகர் அனுமதி பெறாமல், அங்கே நான் வரப்போகிறேன் என்ற எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் திடீரென வந்திருக்கிறார் அந்த விலை உயர்ந்த கல்லான இயக்குனர்.
இவரை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த உச்ச நட்சத்திரம். சத்தம் ஏதும் போடாமல் வெளியே போங்க ப்ளீஸ்.. என்று கூறியிருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்பாராத இயக்குனர் திரும்ப பதில் ஏதும் பேச முடியாமல் வெளியே இருக்கிறா. இந்த விவகாரத்தை அறிந்து கொண்ட உச்ச நட்சத்திரத்தின் சிஷ்யன் நடிகர் கேங்ஸ்டர் இயக்குனர் படத்தை தயாரிப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் என்னுடைய தலைவரை கிண்டல் செய்த ஒருத்தனோடு படம் பண்ண வேண்டுமா..? என்று கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
பணம், படம் எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல.. எல்லாவற்றிற்கும் மேலாக மரியாதை இருக்கணும்.. மரியாதை இல்லாத ஆட்களிடம் எனக்கு வேலை கிடையாது.
இதற்கு மேலும் இது போல ஏதாவது நடந்தால் நான் என்னுடைய படங்களை எடுக்க கிளம்பி விடுவேன். படத்தில் நடிக்க மாட்டேன் என்றுகடுமையான ஆர்டர் போட்டு இருக்கிறாராம் சிஷ்யன் நடிகர்.
இந்த விவகாரம் தான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.