பிரபல நடிகை ஷர்மிளா சமீபத்திய பேட்டியில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். என் மகன் வயதான இளம் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.
அவர் பேசியதாவது அக்கா ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என போன் செய்தார் நேர்ல வாங்க அக்கா பேசிக்கலாம் என்று அழைத்தார். நானும் நடிப்பதாக ஒப்பு கொண்டேன்.
அதன் பிறகு என்னிடம் கதையை கூறினார்கள் நடிக்க சம்பளம் தெரிவித்தேன். அதன் பிறகு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் தருகிறோம். எங்களுடன் நீங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டனர்.
இப்போது நீங்கள் சம்மதம் தெரிவித்தால் உடனே அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளலாம். உங்களுடைய வாய்ப்பு உறுதி செய்யப்படும் என கூறினார்கள். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
என் முன்னே இருந்தது என் மகன் வயது நபர்கள். அவர்களுக்கு 23, 25 வயது தான் இருக்கும் பணம் இருக்கிறது என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தன்னைவிட 30 வயது அதிகமான ஒரு நடிகையை படுக்கைக்கு அழைக்கிறார்கள்.
ஃபோனில் அக்கா அக்கா என்று அழைத்தார்கள். கதை கேட்க செல்லும் பொழுது அக்கா அக்கா என்று அழைத்தார்கள். இப்படி வாய் நிறைய அக்கா அக்கா என அழைத்துவிட்டு படுக்கைக்கு அழைக்கிறார்களே என்று அதிர்ச்சியாகிவிட்டேன்.
உடனே, இங்க பாருங்க உங்களோட வயசுல எனக்கு ஒரு பையன் இருக்கான். அக்கா அக்கா கூப்பிட்டு இப்படி என் கூட படுக்கணும்னு கேக்குறீங்களே..? உங்களுக்கு சரியாக படுதா..? என கேள்வி எழுப்பினேன்.
அதற்கு, அதெல்லாம் தெரியாது அக்கா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. இன்னும் கூட கூடுதலாக சம்பளம் கொடுக்கிறோம் என பேசினார்கள். அதன் பிறகு வாய்ப்பே வேண்டாம் என நான் திரும்பி வந்து விட்டேன்.
சினிமாவில் இப்படியான விஷயங்கள் நடக்கும் தான். ஆனால் அதனை சூசகமாக யாருக்கும் தெரியாமல் ஒரே முறை கேட்பார்கள். ஆனால், தற்போது நேரடியாக இந்த விஷயங்களை கேட்கிறார்கள் என்ற அதிர்ச்சி இன்னும் என்னை விட்டு செல்லவில்லை.
அதுவும் தன்னைவிட வயதில் மூத்தவர் என்று கூட பார்க்காமல் படுக்கைக்கு அழைக்கும் நபர்களை கண்டு நான் அஞ்சுகிறேன் என பேட்டியில் பேசிருக்கிறார் நடிகை ஷர்மிளா.