தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண்-க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் பிரபு சோலமோன் இயக்கத்தில் உருவான கயல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் ஜோதி மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் இவருடைய நடிப்புக்கு சான்றாக விளங்கியது.
கடைசியாக நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான ராவணக்கோட்டம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக இந்திர பிரியதர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளம் சிட்டியில் இருந்து தள்ளி பல கிலோமீட்டர் தள்ளி கிராமத்தில் இருந்தது. இரவு படப்பிடிப்பு முடிந்த பிறகு அங்கிருந்து சிட்டிக்கு சென்று சிட்டியில் உள்ள ஹோட்டலில் சென்று தங்கி மீண்டும் காலையில் எழுந்து குளித்து முடித்து படப்பிடிப்பு தளத்துக்கு வந்து சேர்வது என்பது குதிரைக்கொம்பான ஒரு விஷயம்.
மட்டுமில்லாமல் இரவு நேரத்தில் அந்த சாலையில் பயணம் செய்வது ஆபத்தானது என்று கூறினார்கள். இதன் காரணமாக படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவரும் படப்பிடிப்பு நடந்த ஊரிலேயே தங்கினோம்.
அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கி கொண்டார்கள். நான் என்னுடைய கேரவனில் தங்கி விட்டேன். அங்கேயே தூங்குவது அங்கேயே குளிப்பது அங்கேயே உடைமாற்றுவது என அனைத்தையும் அங்கே செய்து கொண்டேன்.
பட வாய்ப்புக்காக கேரவனையே நான் என்னுடைய ஹோட்டலாக மாற்றிக் கொண்டேன் என பேசியிருக்கிறார் நடிகை கயல் ஆனந்தி.