நடிகை வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படங்களில் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் வெப் சீரிஸ்கரில் தேவை இருக்கிறதோ இல்லையோ வேண்டுமென்றே ஒரு படுக்கை அறை காட்சியை சேர்த்து விடுகிறார்கள்.
இதுபோல உங்களுக்கு ஏதேனும் அனுபவம் நேர்ந்திருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வாணி போஜன் நான் செங்கலம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.கதையை சொல்லும் பொழுது என்னிடம் எதுவும் கூறவில்லை.
ஆனால் படப்பிடிப்பு தளத்தில் படுக்கயறை காட்சி இருக்கிறது என்று கூறினார்கள். நான் யோசித்தேன்.
கதையின் ஓட்டத்திற்கும் இந்த காட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. இந்த காட்சி இல்லை என்றாலும் படம் சிறப்பாக தான் இருக்கும். பிறகு ஏன் வம்படியாக மசாலாவை சேர்க்கிறேன் என்ற பெயரில் இந்த காட்சியை வைக்க வேண்டும்..? என்று தயாரிப்பு குழுவினமே கேட்டேன்.
அவர்கள் நான் சொன்னதை புரிந்து கொண்டார்கள். அதன் பிறகு அந்த காட்சி இல்லாமலே படப்பிடிப்பு நடந்தது. அந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக எனக்கு பலரும் பாராட்டுகளையும் தெரிவித்தனர் என பதிவு செய்திருக்கிறார்.