சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 73 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2 பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளது. இவரது மூத்த மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கணவர், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் 11 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது இவரது வீட்டில் மேல் வீட்டில் குடியிருக்கும் அண்ணாமலை (73) என்பவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நைசாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், சிறுமிக்கு கண்ட இடத்தில் கைது வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 73 முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து மகளிர் போலீசார் அண்ணாமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.